எழுத்துரு விளம்பரம் - Text Pub |
31. லாப நஷ்டம் பற்றிக் கவலைப்படாமல் சுதந்திரமே லட்சியம் என்றிருப்பவர்கள். என்ன நன்மை வருவதாக இருந்தாலும் விருப்பவில்லாத காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். மனோவசியம், ஜோதிடம், வேதாந்தம் முதலிய சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும். ஒரு வேதாந்தியைப் போல எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்வர். இவர்களுக்கு வெற்றி மகிழ்ச்சி தருவதில்லை. அதனால் பயனடையாமல் விட்டுவிடுவர். 31 ஆவது வயதில் எல்லாவற்றையும் துறக்க அல்லது இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். 37 ஆவது வயதில் மீண்டும் பழைய நிலையை அடைவர். எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையைப் பாதிக்கும். முடிவும் எதிர்பாராத விதமாகத் திடிரென்று வரும். பிறந்த தேதி எண் 1 ஆக இருந்தால் இவர்களுக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.