Paristamil Navigation Paristamil advert login

நகர மத்தியில் ஆயுதங்கள் மீட்பு : லியோனில் அதிர்ச்சி..!

நகர மத்தியில் ஆயுதங்கள் மீட்பு : லியோனில் அதிர்ச்சி..!

15 புரட்டாசி 2023 வெள்ளி 12:18 | பார்வைகள் : 5497


வீடொன்றில் திருத்தப்பணிகளின் போது அங்கிருந்து ஆயுதங்கள் சில கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Lyon நகரின் எட்டாம் வட்டாரத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. rue Santos-Dumont வீதியில் உள்ள வீடொன்றை அதன் உரிமையாளர் புதுப்பிக்கும் நோக்கில், ஊழியர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். பூட்டியிருந்த வீட்டினை திறந்த ஊழியர், வீட்டில் ஆயுதங்கள் சில இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார். 

6 கைத்துப்பாக்கிகளும், 3,000 துப்பாக்கி சன்னங்களும் வீட்டின் குளியல் தொட்டிக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. 

உடனடியாக காவல்துறையினர் அவற்றை கைப்பற்றியதுடன், வீட்டின் உரிமையாளரையும் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் அவ்வீட்டில் முன்னதாக வசித்த நபர் ஒருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.