Paristamil Navigation Paristamil advert login

மழையால் ரத்தான ஐபிஎல் போட்டி.... வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ்

மழையால் ரத்தான ஐபிஎல் போட்டி.... வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ்

14 வைகாசி 2024 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 377


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்தானது.

அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானது. சுமார் 3 மணிநேரம் மழை தொடர்ந்தது. இதனால் நாணய சுழற்சி இல்லாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி ரத்தால் கொல்கத்தா அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 13 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்ததால் மூன்றாவது அணியாக தொடரை விட்டு வெளியேறியது.

அகமதாபாத்தில் தங்கள் அணியின் கடைசி போட்டியை காண வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி ரசிகர்கள், போட்டி கைவிடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.