Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில்  தடுப்பூசி நிலையங்கள் அதிரடியாக திறப்பு

ரொறன்ரோவில்  தடுப்பூசி நிலையங்கள் அதிரடியாக திறப்பு

3 சித்திரை 2024 புதன் 10:00 | பார்வைகள் : 1587


கனடாவின் ரொறன்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

பல்வேறு இடங்களில் இவ்வாறு தடுப்பூசி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிலையங்கள் மற்றும் அவற்றில் எவ்வாறு சேவையை பெற்றுக்கொள்வது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பொதுச் சுகாதார சேவையின் இணைய தளத்தில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் அண்மைய நாட்களாக குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்