Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக நம்பும் பத்தில் ஒன்பது பேர்!

பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக நம்பும் பத்தில் ஒன்பது பேர்!

2 சித்திரை 2024 செவ்வாய் 15:57 | பார்வைகள் : 1738


ஒலிம்பிக் போட்டிகளுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கையில், பிரான்சில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக பத்தில் ஒன்பது பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

நேற்று ஏப்ரல் 1 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. நாட்டு மக்களில் 92% சதவீதமானவர்கள் ‘பாதுகாப்பின்மையை’ உணருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரான்சில் இந்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாக அவதானிப்பாளர்கள் தெரிவித்தனர். 

மேற்படி கருத்துக்கணிப்பை Odoxa  நிறுவனம் Le Figaro ஊடகத்துக்காக மேற்கொண்டிருந்தது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்