Paristamil Navigation Paristamil advert login

குக் வித் கோமாளி பிரபலத்துடன் அம்மு அபிராமி காதலா?

குக் வித் கோமாளி பிரபலத்துடன் அம்மு அபிராமி காதலா?

29 பங்குனி 2024 வெள்ளி 10:28 | பார்வைகள் : 1153


நடிகை அம்மு அபிராமி கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் இவர் இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் ’ராட்சசன்’ ’அசுரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் அவரை பிரபலமாகியது என்பதும் அதன் காரணமாகத்தான் தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் உடன் அம்மு அபிராமி காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அம்மு அபிராமி பிறந்த நாளை கொண்டாடிய போது பார்த்திபன் அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வாழ்த்தில் அவர் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிராமி, எப்போதும் சந்தோஷமாக இரு, உன்னை போன்ற இனிமையான ஆன்மாவுக்கு புன்னகை நிறைந்த பலர் வாழ்த்துவார்கள்’ என்று கூறியுள்ளார். இதற்கு ’நன்றி’ என அம்மு அபிராமி பதில் அளித்துள்ளார்.

இந்த இரண்டு பதிவுகளுக்கும் ஷிவாங்கி, குரேஷி ஆகியோர் மாறி மாறி கலாய்த்து வரும் நிலையில் இருவருக்கும் இடையே காதலா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்து இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்