Paristamil Navigation Paristamil advert login

யாழில் பாடசாலை மாணவியை தாக்கிய அதிபருக்கு நேர்ந்த கதி

யாழில் பாடசாலை மாணவியை தாக்கிய அதிபருக்கு நேர்ந்த கதி

16 ஆடி 2023 ஞாயிறு 08:20 | பார்வைகள் : 3555


யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ளது.

இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நாளை திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அதிபரை முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்