Paristamil Navigation Paristamil advert login

கல்கி படத்தில் அமிதாப் பச்சன்...

கல்கி படத்தில் அமிதாப் பச்சன்...

22 சித்திரை 2024 திங்கள் 12:25 | பார்வைகள் : 389


கல்கி' படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கும் கதாபாத்திரத்தை மிரட்டலான வீடியோவுடன் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.'சலார்' படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் 'கல்கி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'நடிகையர் திலகம்' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரூ.500 கோடிக்கு மேல் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பிரபாஸுடன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், கல்கி படத்தில் அமிதாப்பச்சன் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கெளரவர்களுக்கு குருவாக இருந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா, அனுமான் போலவே இந்த பூமியில் உயிருடன் உலாவி வருவதாக புராணக் கதைகள் உள்ளன. அதை மையப்படுத்தி அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

அறிமுக டீசரில், துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா என தன்னை அமிதாப்பச்சன் அறிமுகம் செய்யும் காட்சி மிரட்டலாக வந்துள்ளது. பிரபாஸ் பைரவா கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்திலும் நடித்துள்ள நிலையில், கல்கியாக கமல்ஹாசன் நடித்து இருக்கிறாரா என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்