Paristamil Navigation Paristamil advert login

'ஜெயிலர் 2' படம் உறுதியாகிவிட்டதா ?

'ஜெயிலர் 2' படம்  உறுதியாகிவிட்டதா ?

13 சித்திரை 2024 சனி 08:16 | பார்வைகள் : 565


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்திற்குப் பிறகு ’லால் சலாம்’ ’வேட்டையன்’ ’தலைவர் 171’ என்று அடுத்தடுத்து ரஜினி பிஸியாகிவிட்ட நிலையில் நெல்சன் இன்னும் அடுத்த படத்தை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நெல்சன் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு தயாராகி வருவதாகவும், அதற்கான திரைக்கதை எழுதும் பணியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’ஹூக்கும்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் டைட்டில் கூட தேர்வு செய்யப்பட்டு விட்டதால் ‘ஜெயிலர் 2’ வருவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் ’ஹூக்கும்’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அதையே இரண்டாம் பாகத்தின் டைட்டில் ஆக வைத்திருப்பது சரியான முடிவு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் மீண்டும் ரஜினி - நெல்சன் இணையும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்