Paristamil Navigation Paristamil advert login

‘தளபதி 69’தான் நடிகர் விஜயின் கடைசிப்படமா?

‘தளபதி 69’தான் நடிகர் விஜயின் கடைசிப்படமா?

4 பங்குனி 2024 திங்கள் 14:48 | பார்வைகள் : 1149


'GOAT' படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்காகவே நிறைய அப்டேட்டை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. மேலும், ‘தளபதி69’தான் விஜயின் கடைசிப்படமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய் நடித்து வரக்கூடிய 'GOAT' படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தகாத வார்த்தையில் திட்டுகிறார்கள் எனக் கூறினார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்த நிலையில் இன்று பட விழா ஒன்றில் கலந்து கொண்டவர் 'GOAT' படம் குறித்தான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

“சரியான நேரத்தில் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் காத்திருக்கிறோம். படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த மாதத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பின் ஃபாரின் ஷெட்யூல் மட்டுமே உள்ளது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் ஓவர். எந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கும் 'GOAT' இல்லை. இது முற்றிலும் புதிய கதை” என்றார்.

மேலும், “’தளபதி 69’ படம் தான் விஜய் சாரின் கடைசிப் படமா எனத் தெரியவில்லை. நானும் உங்களைப் போல அறிக்கைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். ஒரு ரசிகனாக அவர் இன்னும் கொஞ்சம் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும். 'GOAT' திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக வலுவானது. நிறைய சிஜி பணிகள் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை காரணமாக தற்போது அவர் நடித்து வரும் 'GOAT' திரைப்படம் மற்றும் ‘தளபதி 69’ ஆகியவை இறுதியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதன் பிறகு முழுநேரமாக அரசியலில் விஜய் இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்