Paristamil Navigation Paristamil advert login

சுடும் ரோபோ நாய்கள்., போர்களுக்கு புதிய யுக்திகளை தயார் செய்யும் சீனா

சுடும் ரோபோ நாய்கள்., போர்களுக்கு புதிய யுக்திகளை தயார் செய்யும் சீனா

4 பங்குனி 2024 திங்கள் 12:57 | பார்வைகள் : 1038


பாரிய அளவில் சுடும் திறன் கொண்ட ரோபோ நாய்களை சீனா தயாரித்து வருகிறது.

போர்களுக்கு புதிய யுக்திகளை தயார் செய்யும் விதமாக, சுடக்கூடிய இந்த ரோபோ நாய்களை உருவாக்கி வருகிறது சீனா.

இந்த ரோபோ நாய்களால் பாரிய அளவில் சுட முடியும் என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

நான்கு கால் இயந்திரங்களான இந்த நாய்கள் புதுமையான மின்னணு செல்லப்பிராணிகளாக அல்லது தடகள விளையாட்டு வீரருக்கு வட்டு எடுத்துச் செல்வது போன்ற சாதாரண பணிகளைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நாய்களில் சில ஆயுதம் ஏந்தியதாகவும், நேரடி ராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டதாகவும் காட்டும் காட்சிகளை சீன ராணுவம் அரசு ஊடகங்கள் மூலம் பகிர்ந்துள்ளது.

ஆனால் இதெல்லாம் வெறும் பிரச்சாரம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த ரோபோ நாய்களின் வடிவமைப்பு காரணமாக தரமான ஆயுதங்களை தாங்கும் திறன் இல்லை என கூறப்படுகிறது.

பயிற்சி பெற்ற ராணுவ வீரரைப் போல் வேகமாகவும் துல்லியமாகவும் சுடுவது இயலாத காரியம் என்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்