Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் நாட்டில் கொல்லப்படும் ரஷ்ய வீரர்கள்...

உக்ரைன் நாட்டில்  கொல்லப்படும் ரஷ்ய வீரர்கள்...

31 ஆடி 2023 திங்கள் 07:28 | பார்வைகள் : 3760


உக்ரைன் ரஷ்யா இடையிலான போரானது ஒன்றரை ஆண்டுகளை கடந்து  இன்னும் முடிவு இன்றி இடம்பெற்றுவருகின்றது.

போர் நிறைவடைவதற்கான எத்தகைய அறிகுறிகளும் வெளிப்படவில்லை என்றே சொல்லப்படுகின்றது.

இந்நிலையில், போர் ஆரம்பமாகியதில்  இருந்து இதுவரை மொத்தமாக 2,45,700 ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய ஆயுதப் படை வீரர்களால் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் இராணுவ ஜெனரல் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 480 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுடன் சேர்த்து உக்ரைனில்  தாக்குதலுக்காக களமிறக்கப்பட்ட ரஷ்ய போர் ஆயுதங்களும் வாகனங்களும் உக்ரைனிய படைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

சிதைக்கப்பட்ட மற்றும் கைப்பற்றபட்ட ஆயுதங்களின் முறையே, 14 ரஷ்ய டாங்கிகள், 11 கவச வாகனங்கள், 9 பீரங்கிகள், 1 விமான எதிர்ப்பு போர் அமைப்பு, 4 தந்திரோபாய ஆளில்லா வான்வழி வாகனங்கள், 28 டிரக்குகள் மற்றும் 1 யூனிட் சிறப்புப் படைகளை கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்