Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

3 ஆவணி 2023 வியாழன் 15:24 | பார்வைகள் : 2903


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 308 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 70 சதமாக காணப்பட்டது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322 ரூபா 68 சதமாக காணப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்