Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க அதிபர் தேர்தல் -  டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் கமலா

அமெரிக்க அதிபர் தேர்தல் -  டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் கமலா

18 தை 2024 வியாழன் 13:35 | பார்வைகள் : 2309


அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு (2024) இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்க, அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு பெருகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ள நிலையில் அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது,


"டொனால்ட் டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது, இதனால் தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.

டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும், இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல, நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும், ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்