Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் அமைப்பின் துணைத்தளபதியின் சகோதரிகளை கைது - இஸ்ரேல் படை

ஹமாஸ் அமைப்பின் துணைத்தளபதியின் சகோதரிகளை கைது - இஸ்ரேல் படை

15 தை 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 1613


இஸ்ரேல் நாடானது ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்பதாக உறுதி கொண்டுள்ளது.

இந்நிலையில் காசா நகரத்தின் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

லெபனானில் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் துணைத் தளபதி சலே அல்-அரூரியின் சகோதரிகளான தலால் மற்றும் பாத்திமா அல்-அரூரி இருவரும் இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 2 ஆம் திகதி பெய்ரூட்டில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சனிக்கிழமை இரவு இஸ்ரேலிய படைகள் ரமல்லா மாவட்டத்தில் உள்ள அல்-பிரே மற்றும் அரூரா நகரங்களில் உள்ள அவர்களது வீடுகளுக்குள் நுழைந்து இரண்டு பெண்களையும் கைது செய்ததாகக Quds News Network செய்தி வெளியிட்டுள்ளது.

தலால் மற்றும் பாத்திமா அல்-அரூரி ஆகியோர் "வன்முறையை தூண்டுவதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்" என்று இஸ்ரேலிய இராணுவ வானொலியை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.

துணைத் தளபதியின் படுகொலையைத் தொடர்ந்து இரண்டு சகோதரிகளையும் அல்-ஜசீரா பேட்டி கண்டது. அவர்கள் இருவரும் தங்கள் சகோதரரைப் பற்றி பெருமித உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்