Paristamil Navigation Paristamil advert login

SNCF Connect செயலியில் புதிய வசதி!

SNCF Connect செயலியில் புதிய வசதி!

1 மார்கழி 2023 வெள்ளி 10:00 | பார்வைகள் : 2840


SNCF Connect செயலியில் புதிய வசதி ஒன்றை SNCF நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்யப்படும் இருக்கைகள் மீண்டும் கிடைக்கும் நிலையில் இருந்தால் அது தொடர்பில் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

SNCF தொடருந்து சேவைகளின் உத்தியோகபூர்வ செயலியான SNCF Connect செயலியில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள "Etre prévenu si un billet est dispo" வசதியை முடுக்கி (cliquer) விடுவதன் மூலமாக உங்களுக்கு அத்தகவலை தெரிவிக்கும்.

குறித்த இருக்கையை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு 10 நிமிடத்தில் இருந்து 2 மணிநேரம் வரை 'பயணத்திகதியை' பொறுத்து கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இந்த வசதியினை இணையளமூடாக கோரி வந்த பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இதனை SNCF அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்