Paristamil Navigation Paristamil advert login

Yvelines : வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!!

Yvelines : வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!!

23 மார்கழி 2023 சனி 10:49 | பார்வைகள் : 2954


நேற்று வெள்ளிக்கிழமை இரவு Yvelines மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர்.

Bailly எனும் நகருக்கு அருகே ஊடறுத்துச் செல்லும் 307 இலக்க சாலையில் இந்த விபத்து டிசம்பர் 22 ஆம் திகதி இடம்பெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் Peugeot 206 மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மகிழுந்தைச் செலுத்திய 32 வயதுடைய ஒருவரும் அவரது சகோதரி (வயது 34) தாய் (வயது 62) தந்தை (வயது 71) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துக்குள்ளான இரண்டாவது மகிழுந்தினை 34 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார். அவரது மகிழுந்தில் இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்