Paristamil Navigation Paristamil advert login

பணவீக்கத்தை எதிர்கொள்ள தயாராகிறது - 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

பணவீக்கத்தை எதிர்கொள்ள தயாராகிறது - 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

15 புரட்டாசி 2023 வெள்ளி 05:47 | பார்வைகள் : 4987


பணவீக்கத்தை எதிர்கொள்ள தயாராகிறது - 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

பிரான்சில் பணவீக்கம் பெரும் சவாலாக உள்ள நிலையில், அதனை குறைக்கும் திட்டத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி அமைச்சர்கள் கூட்டத்தில் (conseil des ministres) சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், கிட்டத்தட்ட 16 பில்லியன் யூரோக்கள் பணத்தினை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து சேமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரான்சின் நிதி மற்றும் பொருளாதாரத்துக்கான அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டுகளில் பெரும் பணவீக்கத்தினைச் சந்தித்திருந்தது. அதில் பிரான்சும் ஒன்று. இந்நிலையில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற பெரும் தொகை பணத்தை சேமிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதேபோன்ற ஒரு முடிவினையும் பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது.

எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்தவும், நிறுவனங்களுக்கான இழப்பீடுகளை குறைக்கவும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்தோடு, தற்போது 4.9% சதவீதமாக உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டில் 2.6% சதவீதமாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னெடுப்புக்களையும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இதுபோன்ற பல இறுக்கமான பட்டியல் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்