Paristamil Navigation Paristamil advert login

கார குழிப் பணியாரம்

கார குழிப் பணியாரம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9597


பணியாரத்தில் நிறைய உள்ளன. பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் இனிப்புப் பணியாரம் அதிகம் விற்கப்படும். இது உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதுவும் இட்லி போன்று, ஆவியில் வேக வைத்து சமைப்பது. மேலும் குழந்தைகளுக்கு பணியாரம் மிகவும் பிடிக்கும். இதனை காலை அல்லது மாலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம். இப்போது அந்த பணியாரத்தில் கார குழிப் பணியாரத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
தோசை/இட்லி மாவு - 3 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 சிட்டிகை 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் தோசை/இட்லி மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இரண்டு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான கார குழிப் பணியாரம் தயார்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்