Paristamil Navigation Paristamil advert login

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

5 வைகாசி 2024 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 1325


உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ள ரஷ்யா, அவரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.

குறித்த சம்பவம் ரஷ்யாவின் விரக்தியின் சான்று என உக்ரைன் தரப்பு இந்த விவகாரத்தை நிராகரித்துள்ளது. 

ரஷ்ய உள்விவகார அமைச்சகத்தின் தரவுத்தளம் ஜெலன்ஸ்கியை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விவரங்களைத் தெரிவிக்கவில்லை. 

 ரஷ்ய ஜனாதிபதி புடினே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்படும் நிலையில் இருப்பவர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சரகம் பதிலளித்துள்ளது.

மேலும், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை அமுலில் இருப்பதை அந்த நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

உலகில் 123 நாடுகள் விளாடிமிர் புடினை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அதிகாரம் கொண்டவை என்றும் உக்ரைன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா தற்போது பெரும் விரக்தியில் இருப்பதாலையே, இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துவதாகவும் உக்ரைன் விமர்சித்துள்ளது. 

பெப்ரவரி 2022ல் உக்ரைனுடனான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா பல உக்ரேனிய மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக கைதாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்