Paristamil Navigation Paristamil advert login

விவசாய சீரமைப்பு சட்டம்! - பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

விவசாய சீரமைப்பு சட்டம்! - பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

5 வைகாசி 2024 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 717


கடந்த ஒரு வாரத்தில் 35 மணிநேரங்களுக்கு மேலாக விவாதிக்கப்பட்ட ‘விவசாய சீரமைப்பு சட்டம்’ ஒருவழியாக நிறைவுக்கு வந்துள்ளது. மே 4 ஆம் திகதி, நேற்று சனிக்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வாக்கெடுக்கப்பட்டது. 

விவாசயிகளின் நலனுக்காக பல்வேறு நீர் மேலான்மை திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விவசாயத்துக்கு தேவையான நீர்த்தேக்கங்களை உருவாக்குதல், கால்நடைகளுக்கான இடங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுள்ள இந்த மறு சீரமைப்பு தொடர்பில் தொடர் விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும், இம்மாதம் 14 ஆம் திகதி மீண்டும் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. அதையடுத்து சட்ட சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்