Paristamil Navigation Paristamil advert login

நெல்சன் அறிவிக்கப் போகும் அடுத்த படம் இதுதானா?

நெல்சன் அறிவிக்கப் போகும் அடுத்த படம் இதுதானா?

2 வைகாசி 2024 வியாழன் 05:14 | பார்வைகள் : 444


பிரபல இயக்குனர் நெல்சன், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.மே 3இல் நெல்சன் அறிவிக்கப் போகும் அந்த படம் இதுதானா?இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக விஜயை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்த நிலையில் பீஸ்ட் படத்தை இயக்கினார். 

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. எனவே எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக தரமான கதையை தயார் செய்து ஜெயிலர் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.

அடுத்ததாக நெல்சன் என்ன படம் இயக்குவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் நெல்சன், தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. அதன்படி நேற்று ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும் தான் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். 

அதன்படி ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் கவினின் 6வது படத்தை நெல்சன் தயாரித்து வருவதாக சொல்லப்பட்டது. அதன்படி வருகின்ற மே 3 ஆம் தேதி (நாளை) கவினின் 6வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்