Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணுடன் வெளியான புதிய Redmi மொபைல்., சிறப்பம்சங்கள் என்ன?

மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணுடன் வெளியான புதிய Redmi மொபைல்., சிறப்பம்சங்கள் என்ன?

1 வைகாசி 2024 புதன் 06:57 | பார்வைகள் : 314


கால்பந்தாட்ட ஜாம்பவான் Lionel Messi-யின் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்ட Redmi Note 13 Pro+ மொபைல் இன்று வெளியானது.

முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி (Redmi) தனது mid range மொபைல் Redmi Note 13Pro+ World Champions Edition-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Xiaomi அதன் துணை நிறுவனமான Redmi Note 13 Pro+ 5G போனை அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடன் (AFA) இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த போனின் பின் பேனலில் அர்ஜென்டினா ஜெர்ஸி போல் நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகளுடன் டூயல் டோன் டிசைன் உள்ளது.

AFA பிராண்டிங்குடன் ஒரு பிரத்யேக பெட்டி மற்றும் பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த போன் MediaTek Dimensity 7200 Ultra SoC சிப் செட் கொண்டுள்ளது. இது 120W Fast Charging ஆதரவுடன் 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது.

12GB RAM மற்றும் 512 GB Storage-உடன் கூடிய Redmi Note 13 Pro+ 5G World Champions Edition போனின் விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICICI வங்கி, கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.3,000 உடனடி தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. உண்மையில் இந்த போனின் விலை ரூ.37,999.

இதுதவிர ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது.

இந்த புதிய போன் Flipkart, Amazon, Xiaomi retail stores மற்றும் Mi.com ஆகியவற்றில் மே 15 முதல் கிடைக்கும்.

Redmi Note 13Pro+ 5G போன் 12GB RAM மற்றும் 512GB Storage variant ரூ.35,999க்கு கிடைக்கிறது. இந்த போன் Fusion Black, Fusion Purple மற்றும் Fusion White வண்ணங்களில் கிடைக்கிறது.

Xiaomi India தனது 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடன் (AFA) இணைந்து Redmi Note 13Pro + 5G World Champions Edition போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

போனின் பேனலில் "10" என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணை இது குறிக்கிறது.

Redmi Note 13Pro+ 5G World Champions Edition ஆனது Redmi Note 13Pro+ 5G போனில் உள்ள அதே அம்சங்களை கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்