Paristamil Navigation Paristamil advert login

ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம்; நாசா தகவல்!

ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம்; நாசா தகவல்!

30 பங்குனி 2024 சனி 13:02 | பார்வைகள் : 741


முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 

இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.

எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். 

இந்நிலையில் வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்