Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

26 சித்திரை 2024 வெள்ளி 13:08 | பார்வைகள் : 365


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 291 ரூபாய் 87 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 70 சதமாகக் காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 301 ரூபாய் 29 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 58 சதமாகக் காணப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்