Paristamil Navigation Paristamil advert login

தகதகவென ஜொலிக்கும் 24 காரட் தங்க ஹொட்டல் - எங்கு அமைந்துள்ளது தெரியுமா?

தகதகவென ஜொலிக்கும் 24 காரட் தங்க ஹொட்டல் - எங்கு அமைந்துள்ளது தெரியுமா?

20 சித்திரை 2024 சனி 11:22 | பார்வைகள் : 392


கதவின் கைப்பிடி முதல் கழிவறை வரை 24 காரட் தங்கத்தில் ஜொலிக்கும் உலகின் முதல் தங்க ஹொட்டல் ஒன்று 11 ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் தலைநகர் Hanoiயில் அமைந்துள்ள Dolce Hanoi Golden Lake hotel என்னும் ஹொட்டல்தான், உலகின் முதல் முழுமையான தங்க ஹொட்டல் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது.

25 தளங்களைக் கொண்ட இந்த ஹொட்டலில் 400 அறைகள் உள்ளன. அந்த அறைகளில் எங்கு திரும்பினாலும் கண்ணில் படும் ஒரே விடயம், தங்கம் ஆக தான் காணப்படுகின்றது.

11 ஆண்டுகள் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹொட்டலின் வாசலிலுள்ள கதவின் கைப்பிடி முதல், குளியல் தொட்டி, சுவர்கள், கழிவறை என அனைத்தும் 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஹொட்டல் சுவர்கள் மட்டுமல்ல, அந்த ஹொட்டலில் வழங்கப்படும் உணவிலும் தங்கம் உள்ளது. ஆம், இறைச்சி உணவும் தங்கத் தகட்டில் பொதித்துதான் வழங்கப்படுகிறது.

இந்த ஹொட்டலில் தங்குவதற்கான கட்டணம், அடிப்படை வசதிகள் கொண்ட அறைகளுக்கு இரவொன்றிற்கு 250 பவுண்டுகளும், அனைத்து வசதிகளும் கொண்ட executive suites என்னும் ஆடம்பர அறைகளுக்கு 800 பவுண்டுகளும் ஆகும்.

இந்த ஹொட்டலில் குறிப்பிட்டுச் செல்லவேண்டிய ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், உலகில் தங்கத்தால் செய்யபட்ட பொருட்களைக் கொண்ட ஹொட்டல்கள் இருக்கலாம். ஆனால், இந்த ஹொட்டலின் வெளிப்புற சுவர்களிலேயே சுமார் ஒரு டன் தங்கம் பதிக்கப்பட்டுள்ளதால், இப்படி ஒரு ஹொட்டலை வேறெங்கும் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்