Paristamil Navigation Paristamil advert login

எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா..?

எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா..?

7 பங்குனி 2024 வியாழன் 15:08 | பார்வைகள் : 1420


வயது ஏற ஏற நம்முடைய சருமங்களில் பளபளப்பு குறைந்து தோல் சுருங்கி வயதான தோற்றத்தை தருகின்றன. ஆனால் எல்லாருக்குமே எப்போதும் இளமையான தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு இந்த ஆயுர்வேத டிப்ஸ் உதவியாக இருக்கும்.

ஃபேஸ் மசாஜ் : ஆயுர்வேதத்தில் அபயங்கா அல்லது ஆயில் மசாஜ் என்ற பாரம்பரிய பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைச் செய்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள பித்த தோஷத்தை சரியான அளவில் பராமரிக்க முடியும். இதற்கு வழக்கமாக பயன்படுத்தும் மசாஜ் ஆயிலோடு சில துளிகள் எசென்ஷியல் ஆயிலையும் சேர்க்கும் போது கூடுதல் நன்மை கிடைக்கும்.

பால் : சருமத்தை சுத்தப்படுத்த ஆயில் பயன்படுத்தாத விரும்பாதவர்கள் தாராளமாக பாலை உபயோகப்படுத்தலாம். இதுவொரு சிறந்த சரும க்ளீன்ஸராகும். அதுமட்டுமின்றி நமது சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருக்க பால் உதவுகிறது.

யோகா : பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் சிறந்த உடற்பயிற்சியான யோகா மற்றும் பிரானயாமாவை செய்வதன் மூலம் எத்தனை வயதிலும் உங்கள் உடலை வில்லாக வளைக்க முடிவதோடு நீங்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பீர்கள்.

தேன் : தேன் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நமது சருமத்திற்கு இளமையான தோற்றத்தை தருகிறது. இயற்கையான மாய்ஸரைசரான தேனை உங்கள் முகம் முழுவதும் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

நிறைய தண்ணீர் குடியுங்கள் : உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். அதற்கு போதுமான அளவு தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். அதுமட்டுமின்றி சாறுகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வேம்பு மாஸ்க் : வேம்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் செல்களை மீளூருவாக்கம் செய்யும் பண்புகளும் அதிகமாக உள்ளது. ஆகையால் வேம்பு எண்ணெயை பயன்படுத்தி உங்கள் சருமத்தை மசாஜ் செய்யுங்கள். அதன்பிறகு மசாஜ் செய்த இடங்களை வேம்பு கலந்த தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்துங்கள்.

சந்தன மாஸ்க் : சந்தனப் பொடி மற்றும் புதினா பொடியை ஒன்றாக கலந்து குளிப்பதற்கு முன் உங்கள் முகம் அல்லது உடலில் மாஸ்க்காக பயன்படுத்துங்கள். இதோடு சிறிதளவு ரோஸ் வாட்டரையும் சேர்த்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

நச்சுகளை நீக்கும் உணவுகள் : வறுத்த மற்றும் காரமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

வல்லாரை : நமது உடலில் கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி இளமை தோற்றத்தை தரும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக வல்லாரை கருதப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்