Paristamil Navigation Paristamil advert login

லெமன் பெப்பர் சிக்கன்

லெமன் பெப்பர் சிக்கன்

26 பங்குனி 2024 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 460


அசைவ உணவுகளில் சிக்கன் என்றால் யாருக்குத்தான் சாப்பிட பிடிக்காது. அதுவும் சிக்கன் லெக் பீஸ் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. சிக்கன் லெக் பீஸ் வைத்து சுவையான லெமன் பெப்பர் சிக்கன் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் மரினேட் செய்ய தேவையானவை :

சிக்கன் லெக் பீஸ் - 4

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டீஸ்பூன்

எலுமிச்சை - 1/2

உப்பு - சுவைக்கேற்ப

மற்ற பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் சிக்கன் லெக் பீஸ்களை சுத்தம் செய்து நன்றாக அலசி எடுத்து கீறி ஒரு பௌலில் வைத்துக்கொள்ளுங்கள்.

சிக்கனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

சிக்கன் நன்கு மரினேட் ஆனவுடன் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் ஊறவைத்த சிக்கன் லெக் பீஸ்களை போட்டு வேகவிடவும்.

இரண்டு நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி வேகவைக்கவும்.

இதேபோல் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு சிக்கனை திருப்பி திருப்பி போட்டு 15 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

இறுதியாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை தூவி கலந்துவிட்டு இறக்கினால் சுவையான லெமன் பெப்பர் சிக்கன் பரிமாற்ற தயாராக இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்