Paristamil Navigation Paristamil advert login

பூசணிக்காய் அல்வா

பூசணிக்காய் அல்வா

22 பங்குனி 2024 வெள்ளி 09:23 | பார்வைகள் : 618


பூசணிக்காய் கொண்டு சுவையான அல்வா செய்து கொடுத்தால் கண்டிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1/2

சர்க்கரை - 250 கிராம்

முந்திரி - 12

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 7-8 கிராம்

கேசரி பவுடர் - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்

பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

உப்பு - 1 சிட்டிகை


செய்முறை:

பூசணிக்காயை நன்றாக அலசி அதன் தோலை சீவி கொள்ளுங்கள்.

பின்னர் பூசணிக்காயை நன்றாக துருவி அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விட்டு சக்கையை மட்டும் எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.

பூசணிக்காயின் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் பூசணிக்காய் தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.

பூசணிக்காய் தண்ணீர் கொதித்தவுடன் துருவி வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

பூசணிக்காய் நன்கு வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின்னர்அதில் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து 4 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

பிறகு அதில் 1 சிட்டிகை அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறி விடுங்கள்.

பின்னர் அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

பூசணிக்காய் அல்வா நன்றாக வெந்து கலர் மாறியவுடன் அதில் ஒரு சிட்டிகை அளவு பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி சர்க்கரை மற்றும் நெய் நன்றாக சுண்டிய பின் அடுப்பை அணைத்து விடவும்

அடுத்து மற்றொரு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.

முந்திரி பொன்னிறமாக வறுபட்டவுடன் தயார் செய்து வைத்துள்ள பூசணிக்காய் அல்வாவில் சேர்த்து கிளறினால் சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி…

வர்த்தக‌ விளம்பரங்கள்