Paristamil Navigation Paristamil advert login

காளான் கிரேவி

காளான்  கிரேவி

21 பங்குனி 2024 வியாழன் 13:59 | பார்வைகள் : 622


பிரியாணி, வறுவல், கிரேவி, பிரைட் ரைஸ் என விதவிதமாக பல சுவையான உணவுகளை மஷ்ரூம் கொண்டு செய்யலாம். இந்த உணவுகளை அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடுவார்கள். எனவே காளான் வைத்து சுவையான கிரேவி எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

காளான் - 75 கிராம்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - 1

பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை

கிராம்பு - 2

முந்திரி - 6

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு

செய்முறை :

முதலில் முந்திரியை 10 நிமிங்கள் சூடான நீரில் ஊறவைத்து பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

அதன் பச்சை வாசனை போனவுடன்  பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

இவை கொதி வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கவும்.

காளான் நன்கு வெந்தது கிரேவி பதத்திற்கு வந்தவுடன் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி நன்கு கிளறி இறக்கினால் சுவையான காளான் கிரேவி ரெடி…

வர்த்தக‌ விளம்பரங்கள்