Paristamil Navigation Paristamil advert login

போலி சிகரெட்டுக்கள் தொடர்பில் சூத்திரதாரியாக செயல்படுபவர் யார் ?

போலி சிகரெட்டுக்கள் தொடர்பில் சூத்திரதாரியாக செயல்படுபவர் யார் ?

25 தை 2024 வியாழன் 16:42 | பார்வைகள் : 680


உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுத்துள்ளபடி, 'சட்டவிரோத சிகரெட் வர்த்தகம்' என்பது சிகரெட்டுகளின் உற்பத்தி,  ஏற்றுமதி, இறக்குமதி, உடைமை, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் எளிதாக்குதல் போன்ற சட்டவிரோத முயற்சிகளை குறிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் மூன்று தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. கடத்தல் (smuggled), போலித் தயாரிப்புகள் (counterfeits) மற்றும் மலிவான / சட்டவிரோத சிகரட்டுக்கள் (வெள்ளை சிகரட்டுகள் cheap / elicits white) போன்றவையாகும்.

புதிய ஆதாரங்களுடன், புகையிலை நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் சிக்கலாக ஈடுபட்டுள்ளன என்பதும் இது உலக அளவில் புகையிலை நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு விரிவான உத்தி (தந்திரோபாயம்) என்பதும் இனியும் ஒரு ரகசியம் அல்ல. 

உலக சுகாதார அமைப்பு மற்றும் பாத் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளின்படி, புகையிலை நிறுவனங்களின் உள் ஆவணங்கள் 1990களின் முற்பகுதியில், சிகரெட் கடத்தல் தொழில்துறையின் வணிக உத்தியின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது. 

1990களின் பிற்பகுதியிலும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்த தந்திரோபாயங்கள் அம்பலமானது. குறிப்பாக விசாரணைகள்,  புகைபொருள் உற்பத்திக்கு எதிரான வழக்குகள் போன்றன புகையிலை நிறுவனங்களுக்கு மிகவும் எதிர்மறையான விளம்பரத்துக்கு வழிவகுத்தது. பாரிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, புகையிலை நிறுவனங்கள் தாங்கள் சிகரெட் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது. ஆனால் தற்போதைய சான்றுகள், சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் புகையிலை நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க, தொடர்ச்சியான குறுக்கீடுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன என்பதை காட்டுகிறது.

பல தசாப்தங்களாக பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன. அதன் மூலம் அவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்கின்றன. புகையிலை நிறுவனங்கள் பின்வரும் நன்மைகளைப் பெற தங்கள் தயாரிப்புகளை கடத்துகின்றனர். 

சிகரெட் பொருட்கள் மீதான வரி அல்லது விலை உயர்வை கட்டுப்படுத்துதல்.

அவர்களின் தயாரிப்புகள் சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை பொருட்படுத்தாமல் அதன் மூலம் லாபம் ஈட்டுதல்.

புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக வாதிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்தல்.

குறிப்பாக சிகரட் மீது ஏற்படுத்தும் ஒவ்வொரு கொள்கையும் சிகரெட் கடத்தலை அதிகரிக்க வழிவகுக்கிறது.

கடத்தலின் விளைவாக குறையும் சாதாரண பொதுச் சந்தை விலைகள் புகையிலை தொழிலை நிறுத்துவதை தடுக்கின்றது மற்றும் மொத்த விற்பனையை அதிகரிக்கிறது.

புகையிலை நிறுவனங்கள் ஏன் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன?

சட்டவிரோத விற்பனையானது தற்போதுள்ள புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை (பேக்கேஜிங் சட்டங்கள், விற்பனையின் வயது வரம்புகள்) பலவீனப்படுத்துகிறது.

புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கும் ஒரு உத்தியாகவும் கடத்தலைப் பயன்படுத்துகின்றன.

சிகரட் மீதான வரி அதிகரிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்படும்போது அல்லது இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது போல் சிறந்த வரிக் கொள்கைகள் இருக்கும்போது நாட்டில் சட்ட விரோதமான சிகரெட் வர்த்தகத்தின் அளவையும் தீவிரத்தையும் பெரிதுபடுத்துவது புகையிலை நிறுவனங்களினால் பயன்படுத்தப்படும் பொதுவான உத்தியாகும்.

இச்சந்தர்ப்பத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய பொதுவான வாதங்கள் பின்வருமாறு:

சிகரெட் வரி அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத புகையிலை பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும்.

ஒரு சட்டவிரோத சிகரெட் சந்தையின் இருப்பு வரி அதிகரிப்புக்குப் பிறகு அரசாங்க வருவாய் குறைவதற்கு வழிவகுக்கிறது.

ஜூலை 2023இல் சிகரெட் பொருட்களுக்கான வரி 20% மற்றும் 01 ஜனவரி 2024இல் 14%ஆக அதிகரிக்கப்பட்டதன் மூலம் மேற்கண்ட வாதங்கள் ஊடகங்களில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோத புகையிலை வர்த்தகம் பற்றிய உச்சகட்ட பேச்சுக்கு வழிவகுத்தது.

இது சம்பந்தமாக, இலங்கையில் சில ஆய்வு அறிக்கைகளின் உள்ளடக்கங்களை கவனம் செலுத்தும்போது, ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் சிகரெட் வரி அதிகரிப்பு தொடர்பான உண்மைகளை முன்வைக்கின்றன.

மேலும் ஆய்வுகள் வாசகரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அவை தெளிவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய மற்றும் தவறாக வழிநடத்தும் புகையிலை நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட வாதங்கள்.

சிகரெட் மீதான வரி அதிகரிப்பால் நுகர்வோர் மீண்டும் மலிவு விலையில் மாற்று வழிகளுக்கு திரும்புவார்கள். இது சட்டவிரோத சிகரெட் வர்த்தகம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.  இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வரி உயர்த்தப்பட்டாலும், அரசின் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும், இலங்கையில் சிகரெட் உற்பத்திப் பொருட்களின் கடத்தல் 20%க்கும் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தரவுகள் புகையிலை நிறுவனம் மற்றும் சந்தை ஆதாரங்களால் உருவாக்கப்பட்ட தரவு என்பதுடன் தெளிவற்ற ஆதாரங்கள் இருப்பதனால் இந்த புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, புகைபொருள் உற்பத்திக்கு சாதகமான தரவை முன்வைக்கும் போக்குடன், அத்தகைய ஆதாரங்களை நம்புவதில் சிக்கல் உள்ளது. 

குறிப்பிட்ட இந்த ஆய்வுகளுக்கு யார் நிதியுதவி அளித்துள்ளனர் என்பதும் சந்தேகமாக உள்ளது.

மாறாக, உத்தியோகபூர்வ சுங்கப் புள்ளிவிபரங்கள் கடத்தப்பட்ட சிகரெட்டுகளில் 1%க்கும் குறைவானவை கைப்பற்றப்பட்டதாக வெளிப்படுத்துகின்றன. கடத்தல் சம்பவங்கள் மேலே குறிப்பிடப்பட்ட 20%ஆக இருந்தால், சட்டவிரோத சிகரெட் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதையும் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேவையை இது முன்வைக்கிறது.

கிடைக்கக்கூடிய பிற தரவு மற்றும் தகவல்களுக்கு இணங்க, வரி மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் சிகரெட் பொருட்களின் கடத்தலுக்குப் பின்னால் ஒரே ஒரு காரணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது சிகரெட் பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரித்தபோது அதனுடன் இணைத்து ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சட்டவிரோத சிகரட் உற்பத்தியை பெரிதுபடுத்துதல், விளம்பரம் செய்தல் தெளிவாகிறது. இந்த காரணிகளில் பல்வேறு நாடுகளுக்கு இடையே சட்டபூர்வ சிகரெட் பொருட்களின் விலையில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் சிகரெட் கடத்தலுக்கான போதுமான அபராதம் ஆகியவை அடங்கும். 

எனவே, சிகரெட் பொருட்களின் கடத்தலுடன் தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக, சிகரெட் / புகையிலை பொருட்கள் மீதான சட்ட விரோத வர்த்தகத்தை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 8 பெப்ரவரி 2016 அன்று இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, அனைத்து ஆட்கடத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க செயலூக்கமான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும். 

அதன்படி, சட்டவிரோத சிகரெட் / புகையிலை பொருட்களை அகற்றவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு என்பதை வலியுறுத்துகிறோம்.

தகவல் : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்