எழுத்துரு விளம்பரம் - Text Pub

வவுனியாவில் குண்டு புரளியால் ஏற்பட்ட பரபரப்பு!

25 May, 2023, Thu 17:26   |  views: 1386

வவுனியா, நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்கு வைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித் திரிவதாகவும், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் எனவும் கூறிச் சென்றுள்ளனர்.
 
குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
 
குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கேட்டபோது, பொலிஸார் என அடையாளப்படுத்திய இருவர் மேற்குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச் சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.
 
அத்துடன், பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18