எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 May, 2023, Thu 9:53 | views: 1558
புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார்.
சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது சிங்கப்பூர் உள்துறை மந்திரி, இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்ளிட்டவை குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கலந்துரையாடினார். மேலும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சண்முகம் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறிய முதல் அமைச்சர், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சண்முகத்திற்கு அழைப்பு விடுத்தார். சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் புறப்படுகிறார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்..!! - மத்திய மந்திரி கண்டனம்5 June, 2023, Mon 4:56 | views: 381
![]() ஒடிசா விபத்து: இன்று முதல் ரெயில் சேவை துவக்கம்..!!5 June, 2023, Mon 4:47 | views: 387
![]() ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்..!4 June, 2023, Sun 9:15 | views: 1403
![]() அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை: ராஜினாமா கோரிக்கையை நிராகரித்த ரயில்வே மந்திரி4 June, 2023, Sun 7:15 | views: 1574
![]() ஒடிசா ரெயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை - தமிழக குழு தகவல்4 June, 2023, Sun 7:10 | views: 1514
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |