எழுத்துரு விளம்பரம் - Text Pub

உக்ரைன் ரஷ்யா போர் - வெளியாகியுள்ள அறிக்கை

24 May, 2023, Wed 10:02   |  views: 3764

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பல நாடுகளின் ஆதரவை நாடியது. 

 
ஆயுதங்கள் முதல் பல்வேறு உதவிகள் கோரியது.
 
ஆனால், ஜேர்மனி போன்ற சில நாடுகள் வெளிப்படையாக உக்ரைனுக்கு ஆதரவளிக்க மிகவும் தயக்கம் காட்டின. 
 
உக்ரைனுக்கு உதவுவது ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்று கூறி ஜேர்மனி அமைதி காத்தது.
 
சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த புடினுடைய இரகசிய காதலி மீது கூட தடைகள் விதிக்க நாடுகள் தயங்கின.
 
நேற்று முன்தினம், உக்ரைன் ரஷ்ய எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான Belgorod தாக்குதலுக்குள்ளானது. 
 
ரஷ்யா மீதே தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
 
ரஷ்யா உக்ரைன் மீது குற்றம் சாட்ட, உக்ரைனோ புடினுக்கு எதிரான ரஷ்யக் குழுக்கள் அந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறியுள்ளது.
 
இதற்கிடையில், அந்த தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பான வாகனங்களும் பங்கேற்றதற்கு அடையாளமாக, அந்த வாகனங்கள் விழுந்து கிடப்பதைக் காட்டும் புகைப்படங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
 
உடனே, தாங்கள் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதை ஊக்குவிப்பதில்லை என அமெரிக்கா கூறிவிட்டது.
 
அத்துடன், அமெரிக்க மாகாணத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
 
ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் விடயத்தின் உண்மைத்தன்மையில் சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்தப் போரை எப்படி நடத்துவது என்பதைத் தீர்மானிப்பது உக்ரைனுடைய கையில் உள்ளது என்றும் கூறியுள்ளார். 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18