எழுத்துரு விளம்பரம் - Text Pub

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட 77 வயது பெண்

18 May, 2023, Thu 9:47   |  views: 3017

அமெரிக்காவில் 77 வயதான பெண் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.
 
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த டோரதி "டாட்டி" ஃபிடெலி (Dorothy “Dottie” Fideli) எனும் 77 வயது பெண், தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை நிறைவேற்ற தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார்.
 
தனது திருமணத்தை மே 13-ஆம் திகதி ஓஹியோவின் கோஷனில் தான் வாழும் முதியோர் இல்லமான O'Bannon Terrace Retirement Community-லேயே நடத்தினார் டாட்டி.
 
இந்தத் திருமண விழாவில் அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினகலந்துகொண்டனர்.
 
முன்னதாக டாட்டி 1965-ல் திருமணம் செய்து கொண்டார், ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து ஆனது.
 
அதன்பிறகு அவர் திருமணம் செய்யவில்லை.
 
ஆனால், திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பிய அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை.
 
மூன்று குழந்தைகளுக்கு தாயான டாட்டி, ஒரு பேச்சு நிகழ்ச்சியில் ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், இது ஒரு நல்ல யோசனையாக இருந்ததாகவும் கூறினார்.
 
அதையடுத்து, தானும் அதேபோல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். 
 
முதலில் பதட்டமாக இருந்ததாகவும், ஆனால் தனது பெருநாளை முன்னிட்டு உற்சாகமடைந்தார்.
 
தனது சிறப்பு நாளைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்திய டாட்டி, அவரது ஓய்வு இல்லத்தின் சொத்து மேலாளரான ராப் கெய்கரிடம் உதவி கேட்டார். 
 
அதையடுத்து அனைத்தும் சுமூகமாக முடிந்தது.
 
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளைக் கவனித்துக்கொண்டதில் கழித்த பிறகு, தனது வாழ்க்கை "இப்போது என்னைப் பற்றியது" என்று உற்சாகமாக இருக்கிறார் டாட்டி.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18