எழுத்துரு விளம்பரம் - Text Pub

ரோல் சமோசா

8 May, 2023, Mon 14:33   |  views: 4194

முக்கோண வடிவில் உள்ள சமோசாவை அனைவருக்கும் தெரியும், வித்யாசமான அனுபவத்திற்கு இந்த ரோல் சமோசாவை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

 
தேவையான பொருட்கள்:
 
ஒன்றரை கப் மைதா மாவு
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
எண்ணெய் – 100 மில்லி
ஒரு டீஸ்பூன் மிளகாய் விதை
ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் எள்ளு
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
சுண்டல் – கால் கப்
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை :
 
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் உருண்டையாக பிடித்து வட்ட வடிவில் தேய்த்து வைக்கவும்.
 
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சீரகம், எள்ளு ஆகியவற்றை பொரிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சுண்டல், மிளகாய் விதை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி தூள் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.
 
மசாலா ஆறிய பின்னர் அதை உருண்டையாக பிரிக்கவும். மசாலாவை மைதா ரொட்டியில் வைத்து மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 
இப்போது சூடான, சுவையான சமோசா தயாராகிவிட்டது. புதினா சட்னி, தக்காளி சாஸ் வைத்து சாப்பிடலாம். தரமான பொருட்களை கொண்டு வீட்டிலேயே செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

செட்டிநாடு ஸ்டைல் மிளகு சிக்கன் செய்யலாமா?

4 June, 2023, Sun 6:16   |  views: 642

சிக்கன் மோமோஸ்

29 May, 2023, Mon 16:52   |  views: 1557

மீன் குருமா

15 May, 2023, Mon 17:26   |  views: 3025

சாக்லேட் குலோப் ஜாமூன்

3 May, 2023, Wed 17:16   |  views: 4137

மீன் பிரியாணி

25 April, 2023, Tue 15:00   |  views: 5347
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18