எழுத்துரு விளம்பரம் - Text Pub

கணவன் மனைவி உறவில் அன்பை விட மிக முக்கியமானது எது....?

18 April, 2023, Tue 10:33   |  views: 7392

துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும், சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் துணைக்கு புரிதல், நம்பிக்கையோடு உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும்.
 
ஒருவர் காதலில் சிக்குவது மிகவும் எளிதானது மற்றும் இயற்கையானது. காதல் என்பது ஒரு வகையான உணர்ச்சியாகும், வாழ்க்கைக்கு இது உண்மையில் முக்கியமானது என்று உங்களுக்கு அது உணர வைக்கும்.
 
ஆனால் தத்ரூபமாகப் பார்த்தால், ஒரு உறவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்கள் ஒரு ஜோடியாக உங்களை வாழ்வில் முன்னேற உதவுகின்றன, மேலும் அவை மிகவும் அவசியமானவை. எனவே அவற்றை உங்களுக்காக இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
 
பொதுவாக காதலர்கள் தங்களுக்குள் மரியாதையுடன் பேசிக் கொள்ள மாட்டார்கள். அப்படி மரியாதை உடன் பேசினால் வேறு யாருடனோ பேசுவது போல இருக்கும் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் சிலரோ தனிமனித மரியாதை மிக அவசியம் என்றும் காதலியாகவே இருந்தாலும் மரியாதை கொடுத்துப் பேச வேண்டும் என்பார்கள். ஆனால் உண்மையில் காதலைத் தாண்டி ஒருவர் மற்றொருவரை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாக காண்போம்.
 
துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும், சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் துணைக்கு புரிதல், நம்பிக்கையோடு உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும்.
 
தொடர்பு கொள்ளும் திறன் : தொடர்பு என்பது காதல் இயந்திரத்தின் எரிபொருள். உறவில் உங்கள் தொடர்பு பலவீனமாக இருந்தால் காதல் நீடிக்காது. எல்லைகளை நிர்ணயிக்கவும், அன்பை வெளிப்படுத்தவும், சிக்கல்களை சரிசெய்யவும், உங்கள் தேவைகளைப் பற்றி பேசவும் உறவில் தொடர்பு தேவை. உங்கள் கூட்டாளரிடம் நீங்கள் அன்பு மழையை பொழிந்தாலும் நல்ல தகவல்தொடர்பு இல்லையென்றால் அது வீணாகிவிடும். எல்லைகளை வரையறுக்க எந்தவொரு உறவிலும் தொடர்பு முக்கியமானது. உணர்வுகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த உங்களுக்கு இது தேவை. 
 
மோதல்களைத் தீர்க்க உங்களுக்கு இது தேவை, நெருக்கம் வரும்போது கூட உங்களுக்குத் தேவை.ஒருவர் மீது மற்றொருவரின் நம்பிக்கை : நீங்கள் மற்ற நபரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் அவர்களை நம்ப முடியாவிட்டால், அனைத்தும் வீண் தான். 
 
ஆரோக்கியமான உறவுக்கு நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கை என்பது மோசடி அல்லது துரோகத்துடன் தொடர்புடையது அல்ல. உறவில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று நம்பிக்கை. உங்கள் துணையை நீங்கள் நம்பவில்லை என்றால், அது ஒரு ஆரோக்கியமான  நிலையான உறவு அல்ல. இருவருக்குள் முதலில் சிக்கல் இருந்தாலும் காலப்போக்கில் அவர்களுக்குள் நம்பிக்கை வலுவாக வளர்கிறது.
 
உறவுகளுக்குள் நேர்மை : உறவுகள் என்று வரும்போது உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது முக்கியம். தவறான நம்பிக்கையையும், பொய்களையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு உறவு, விரைவில் நொறுங்கிவிடும். நேர்மையாக இருப்பது நீண்ட கால நிம்மதிக்கு வழிவகுக்கிறது, இது உறவின் பல அம்சங்களை பலப்படுத்தும். உண்மையான அன்பை விட நீண்ட கால உறவை நீங்கள் தேடும்போது அதில் நேர்மை மிக முக்கியமானது.
 
ஒருவருக்கொருவரை உண்மையாக நேசித்தல் : நீங்கள் ஒருபோதும் அன்பு பாராட்டாத குடும்ப உறுப்பினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம், ஆனால் அவர்களைச் சுற்றி இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உறவில் உங்கள் கூட்டாளரிடமும் இதேதான் நடக்கலாம். நீங்கள் அவர்களை மிகவும் நேசிக்கலாம், ஆனால் ஒருபோதும் அவர்களின் தவறுகளை ரசிக்கவோ அல்லது உற்சாகப்படுத்தவோ கூடாது. எனவே நீங்கள் உறவில் இருப்பதை விட அவருக்கு அன்பை கொடுப்பது முக்கியம்.
 
பாதுகாப்பாக உணர்தல் : உங்கள் உறவில் நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், நீங்கள் அந்த நபரை எவ்வளவு நேசித்தாலும் அது வீண் தான். ஒரு விஷத்தை எந்த உணவில் கலந்தாலும் அது விஷம் தான். நீங்கள் ஒரு அன்பான உறவில் இருந்தால், உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் அதில் நீங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது, 
 
ஆனால் உங்கள் கூட்டாளருடன் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம். சில நேரங்களில், அன்பை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது, அன்பை உணரவும் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலும், ஆண்களுக்கு பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள மட்டும் தான் தெரியுமே தவிர, பெண்கள் தங்கள் மீது வைத்திருக்கும் / காட்டும் அன்பை உணர மாட்டார்கள். எனவே, ஓர் ஆணாக, கணவனாக, காதலனாக பெண்கள் வெளிப்படுத்தும் / காட்டும் அன்பை உணர தெரிந்துக் கொள்ள வேண்டும்.
 
உறவில் விசுவாசம் : இது ஒரு நம்பிக்கையுடன் தொடர்புடையது. உங்கள் வாழ்வின் பங்குதாரர் உறவுக்கு உண்மையாக / விசுவாசமாக இல்லையென்றால், நீங்கள் ஏன் ஒரு உறவில் இருக்கிறீர்கள்? என்ற கேள்வி எழுவது பொதுவானது தான். இங்கு குறிப்பிடப்படும் விசுவாசம் என்பது நேர்மையின் மற்ற வடிவம்.
 
எப்போதும் மகிழ்ச்சியாக இருத்தல் : உண்மையில் நீங்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாது, ஆனால் எல்லோரும் விரும்புவது மகிழ்ச்சியைத்தான். உறவுகள் என்பது சூரிய ஒளி மற்றும் வானவில் போன்றதல்ல, ஆனால் உங்களுக்குள் மகிழ்ச்சியான நேரங்கள் மகிழ்ச்சியற்ற நேரங்களை விட அதிகமாக இருக்க வேண்டும். ஒரு உறவில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியமானது, நீங்கள் உறவில் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் இப்போதே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18