எழுத்துரு விளம்பரம் - Text Pub

சிக்கன் பாப்கார்ன்

20 February, 2023, Mon 16:33   |  views: 4782

 சிக்கன் நம் அனைவருக்கும் விருப்பமான அசைவ உணவாகும். சிக்கன் பாப்கார்ன் குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இதனை வீட்டில் ட்ரை பண்ணிபாருங்கள்.

 
தேவையான பொருட்கள்:
 
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
 
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
 
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 
பிரட் - 4
 
முட்டை - 1
 
பால் - 1 டேபிள் ஸ்பூன்
 
மைதா - 1/2 கப்
 
செய்முறை:
 
முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
 
பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.
 
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
 
பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.
 
இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

நுங்கு பாயாசம்

27 March, 2023, Mon 4:47   |  views: 1028

மட்டன் நெய் ரோஸ்ட்

20 March, 2023, Mon 0:29   |  views: 2115

உருளைகிழங்கு ஆம்லெட்

16 March, 2023, Thu 14:01   |  views: 2579

வாழைக்காய் கிரேவி..

9 March, 2023, Thu 5:26   |  views: 3160

தயிர் வடை

6 March, 2023, Mon 6:50   |  views: 3454
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18