எழுத்துரு விளம்பரம் - Text Pub |
8 February, 2023, Wed 6:24 | views: 2446
அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி.
பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான்.
அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை.
வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள்.
அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.
உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று
கடவுளும் வந்தார்...!
பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.
அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.
தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.
இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.
இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.
சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.
வருத்தம் வராது.
சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.
பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.
கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது.
இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.
கோபம் என்பது மணிதனின் இனிய பண்புகளை சுட்டு எறிக்கும் தீ
![]() | அடுத்த ![]() |
|
![]() யானையின் அடக்கம்25 March, 2023, Sat 12:50 | views: 766
![]() காட்டு ராஜாவுக்கு போட்டி23 March, 2023, Thu 10:08 | views: 1063
![]() சிங்கமும் கழுதைப்புலியும்20 March, 2023, Mon 11:30 | views: 1308
![]() நன்றி மறந்த சிங்கம்17 March, 2023, Fri 9:59 | views: 1799
![]() முட்டாள் வணிகன்14 March, 2023, Tue 10:51 | views: 8333
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |