எழுத்துரு விளம்பரம் - Text Pub

அவுஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் பின்ச் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

8 February, 2023, Wed 6:14   |  views: 2558

அவுஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் பின்ச் (Aaron Finch) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவின் டி20 கேப்டன் ஆரோன் ஃபின்ச், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 
 இதன் மூலம் அவருக்கு அவுஸ்திரேலியாவுக்கான 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
 
தொடக்க ஆட்டக்காரரான பின்ச் கடந்த ஆண்டு செப்டம்பரில் 50 ஓவர் வடிவமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
 
ஃபின்ச் அவுஸ்திரேலியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
 
நான் விளையாட மாட்டேன்
செய்தியாளர்களிடம் பேசிய பின்ச், "2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட மாட்டேன் என்பதை உணர்ந்து, பதவி விலகுவதற்கான சரியான தருணம் இது" என கூறினார்.
 
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு (2024 ICC Men's T20 World Cup) புதிய கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரும் போதுமான நேரத்தை வழங்குவது முக்கியம் என்று கூறினார்.
 
டி20 உலகக் கோப்பை போட்டி 2024 ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
 
2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஃபின்ச். 2013-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
 
2018-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஃபின்ச் தனது டெஸ்டில் அறிமுகமானார். வழக்கமான கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் இல்லாத நிலையில், ஃபின்ச் தலைமைக் குழுவின் நிரந்தர அங்கமானார்.
 
அவுஸ்திரேலியாவுக்காக 103 போட்டிகளுக்குப் பிறகு டி20ஐ கிரிக்கெட்டிலிருந்து பின்ச் ஓய்வு பெறுகிறார், அதில் 76 போட்டிகளில் தனது அணியை வழிநடத்தியுள்ளார்.
 
34.28 சராசரி மற்றும் 142.5 ஸ்டிரைக் ரேட்டில் 3120 ஓட்டங்களை எடுத்த பின்ச், டி20ஐ கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவராக ஓய்வு பெறுகிறார்.
 
அவர் 2018-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் எடுத்து, ​​​​அவர் அதிக டி20 ஸ்கோர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18