எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிர்வாண குளியல் அமர்வுக்கு தடை விதித்த பிரித்தானியா

18 March, 2023, Sat 11:31   |  views: 2867

பிரித்தானியாவில் ”டர்கிஷ் பாத்ஸ்” எனப்படும் விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல் அமர்வுகளில் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
 
அதனை தொடர்ந்து விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல்களுக்கு பிரித்தானிய நகரம் தடை விதித்துள்ளது.
 
ஹாரோகேட் டர்கிஷ் ஸ்பாவில் (Harrogate Turkish Baths) உள்ள விக்டோரியன் வசதி எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க குளியலறைகளில் ஆண்களும் பெண்களும் குளியல் அமர்வுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இந்த குளியலின் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் குளியல் உடைகள் தேவைப்படுவது இல்லை.ஆனால்  டர்கிஷ் பாத்ஸ் ஹாரோகேட்டில் அதிகரித்து வரும் தகாத நடத்தை பற்றிய புகார் தொடர்ந்து, பிரித்தானிய நகரம் ஒற்றை பாலின குளியல் அமர்வுகளுக்கு தடை விதித்துள்ளது.
 
இதன்மூலம் அனைத்து குளியல் அமர்வுகளிலும் நீச்சலுடைகள் இப்போது கட்டாயம் என்று செயல்பாட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக ஹாரோகேட் கவுன்சில் அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நாங்கள் கவனிக்க வேண்டிய கடமை உள்ளது.
 
மேலும் அனைத்து ஒற்றை பாலின அமர்வுகளும் பாதுகாப்பான சூழலில் செயல்பட, மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல் உடைகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹாரோகேட் அதன் டர்கிஷ் குளியல் பகுதிகளுக்கு 120 ஆண்டுகளாக வெகு தொலைவில் உள்ள மக்களை அதிகமாக ஈர்த்து வருகிறது.
 
இந்த குளியல் அமர்வை பார்வையிட 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18