எழுத்துரு விளம்பரம் - Text Pub

8 பேரைக் கொன்ற மெக்சிகோ சிறுவன்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

18 March, 2023, Sat 11:13   |  views: 3298

மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் மெக்சிகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டான்.
 
மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி, 
 
சிறுவன் ஜனவரி 22 ஆம் திகதி அன்று பைக்கை ஓட்டிச் சென்று மெக்சிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியான சிமல்ஹுவானில் ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 
ஜனவரி 22 அன்று எட்டு பேரைக் கொன்றது தொடர்பாக மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். 
 
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கும்பலைச் சேர்ந்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
 
கொல்லப்பட்ட 8 பேரைத் தவிர, 5 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகளும் காயமடைந்தனர். 
 
குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால், மெக்சிகோ அதிகாரிகள் அவரது பெயரை வெளியிடவில்லை.
 
ஆனால் அவரது புனைப்பெயர் "எல் சாபிடோ" அல்லது "லிட்டில் சாப்போ" என்பது, சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜோவாகின் "எல் சாப்போ" குஸ்மானுடனான அவரது தொடர்பைக் குறிக்கிறது.
 
இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18