எழுத்துரு விளம்பரம் - Text Pub

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு தடை

18 March, 2023, Sat 10:57   |  views: 1656

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதை தடை செய்த முதல் மாநிலமானது வயோமிங் (Wyoming).
 
வயோமிங் மார்ச் 17 ஆம் திகதி அன்று மருந்து கருக்கலைப்பு மாத்திரைகளின் பயன்பாடு அல்லது பரிந்துரைக்கப்படுவதை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலமாக மாறியுள்ளது.
 
வயோமிங் கவர்னர் மார்க் கார்டன் (Mark Gordon), மாநிலத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை தடை செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார்.
 
உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்திற்கு முன் காலையில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
 
கருக்கலைப்பு மாத்திரைகள் மீதான வயோமிங்கின் தடை ஜூலையில் நடைமுறைக்கு வரும். 
 
தடையை மீறினால் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
 
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கருக்கலைப்புக்கு எதிரான மொத்தத் தடையை வென்றெடுக்கும் முயற்சியில் கருக்கலைப்பு எதிர்ப்புக் குழுக்களால் நாடு முழுவதும் பரவலான நடவடிக்கை எடுத்துவரும் சூழலுக்கு மத்தியில், வயோமிங் மாநிலத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
 
"எல்லா உயிர்களும் புனிதமானது என்றும், பிறக்காதவர்கள் உட்பட ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடனும் கருணையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்," என்று கோர்டன் வெள்ளிக்கிழமை மாலை வெளியுறவுத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறினார். 
 
மேலும், கருக்கலைப்புக்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18