எழுத்துரு விளம்பரம் - Text Pub

யாழில் நீதவான் எதிரில் காதலியின் கன்னத்தில் அறைந்த காதலனுக்கு நேர்ந்த கதி

18 March, 2023, Sat 7:14   |  views: 2869

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்திற்குள் காதலியின் கன்னத்தில் மூன்று முறை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இது தொடர்பில் இளைஞன் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் ஆவாரங்கல் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் யுவதியை சில காலம் காதலித்து வந்துள்ளார்.
 
இளைஞனின் நடத்தை சரியில்லை என்பதால், யுவதி இளைஞனுடனான காதலை ஒரு மாத்திற்கு முன்னர் துண்டித்துள்ளார்.
 
எனினும் இளைஞன் அடிக்கடி யுவதிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளையும் அழுத்தங்களையும் கொடுத்து வந்ததால், யுவதி அது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்திய போதிலும் யுவதிக்கு இளைஞன் கொடுக்கும் தொந்தரவு குறையவில்லை என்பதால், பொலிஸார் இளைஞனுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது யுவதி நீதிமன்றத்தில் கூறிய விடயங்களால், கடும் ஆத்திரத்திற்கு உள்ளான இளைஞன், யுவதிக்கு அருகில் ஓடி சென்று நீதிமன்றத்திற்குள் வைத்தே யுவதியின் கன்னத்தில் மூன்று அறைந்துள்ளார்.
 
இதனையடுத்து வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்திய நீதவான், இளைஞனை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணைகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18