எழுத்துரு விளம்பரம் - Text Pub

மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள்

17 March, 2023, Fri 11:57   |  views: 2252

2021 ஆம் ஆண்டில் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியால் (BIS) நடத்தப்பட்ட கணக்காய்வில், 90% மத்திய வங்கிகள் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் அல்லது CBDC கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், 54% வங்கிகள் ஆறு ஆண்டுகளுக்குள் ஒன்றை வெளியிடுவது தொடர்பில் அவதானிப்பதாக கூறியது.
 
சீனா தனது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமான (CBDC) டிஜிட்டல் சீன மக்கள் நாணயத்துடன் (e-CNY) இந்த முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. 100 பில்லியன் RMB (USD 14 பில்லியன்) மதிப்புள்ள பரிவர்த்தனைகள் ஏற்கனவே e-CNY ஐப் பயன்படுத்தி நடாத்தப்பட்டுள்ளதுடன், இது சீனாவிற்கு பாரிய முன்னிலை முன்னகர்வுக்கான நன்மையை அளிக்கிறது.
 
CBDC களால், மெதுவான மற்றும் விலையுயர்ந்த எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் போன்ற பாரம்பரிய அரசு வெளியிடும் பணத்துடன் (fiat money) தொடர்புடைய பல வினைத்திறனின்மைகளை நிவர்த்தி செய்ய முடியும். இவை பரிவர்த்தனை செய்வதற்கான பாதுகாப்பான, தனிப்பட்ட வழிமுறைகளை வழங்குவதோடு, CBDC களால் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த முடியும். அவற்றால் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கவும், வறுமையை குறைக்கவும், பொருளாதார செயற்திறனை மேம்படுத்தவும் முடியும்.
 
இந்த நாணயங்களால் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு பாரம்பரிய நிதி அமைப்புகளுடன் தொடர்புடைய சவால்களை சமாளிக்க உதவ முடியும். வங்கி இல்லாத மக்களுக்கு நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், CBDC களால் இந்த நாடுகளில் நிதியியல் உள்ளடக்கத்தை வழங்க முடியும். அவற்றால் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விருத்திக்கு வழிவகுக்கும் நிதித் துறையில் புத்தாக்கம் மற்றும் போட்டியை விருத்தி செய்யவும் முடியும்.
 
வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களுக்கான (EMEs) பிரதான முன்னுரிமை குறைந்த போட்டித்தன்மை கொண்ட தொழிற்துறைகளின் முன்னேற்றமாகும். வணிக வேகத்தை அதிகரிப்பதற்கும், தொழில்துறை போட்டியைக் குறைப்பதற்கும், ஒரு வலுவான தொழிற்துறை சூழல் தேவைப்படுகிறது. Credit channeling என்பது அத்தகைய சூழல் அமைப்பின் முக்கிய அங்கமாகும். ஒரு CBDC இனால் மிகவும் வினைத்திறனான, வெளிப்படையான மற்றும் உள்ளடங்கலான சூழல் அமைப்பை உருவாக்க உதவ முடியும்.
 
நிதியியல் உள்ளடங்கலை செயற்படுத்துவதற்கு மேலதிகமாக, வங்கித் துறைக்கு அணுகல் குறைவாக உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான நிதிச் சேவைகளுக்கான அணுகலை CBDC அதிகரிக்க முடியும். EME களில் உள்ள பெரும்பாலான குடிமக்கள் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், அவர்களுக்கு வலுவான கடன் அமைப்பின் சலுகைகள் பற்றாக்குறையாக உள்ளது. வைப்புத்தொகையுடனான வங்கிக் கணக்கை வைத்திருப்பதுடன், அவர்களுக்கு சில வகையான கடன் தேவைப்படுகின்றது.
 
தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் நிதிச் சேவைகளை அணுகுவதற்கு வங்கிக் கணக்கு அல்லது கடன் வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டிய தேவையை நீக்குவதன் மூலம், CBDC களால் நுழைவதற்கான தடைகளை குறைக்க முடியும். அவை சில சேவைகளுக்கான நுழைவு வரம்பைக் குறைக்கலாம், கடன் அணுகலை அதிகரிக்கலாம்.
 
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) வரும்போது வங்கிகள் பொதுவாக கடன்கொடுக்க தயங்குகின்றன. ஏனெனில் பிணையம் ஒரு பெரிய சவாலாக உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் இந்த வணிகங்களுக்கு அவர்களின் பணப்புழக்கங்களுடன் உதவுவதுடன், அவற்றின் பொருத்தமான பிணைய பற்றாக்குறையை ஈடுசெய்யும்.
 
பெரும்பாலான EME களில், வலுவான கட்டணம் செலுத்தும் முறைமை தேவைப்படுகிறது. இத்தகைய அமைப்பு செயற்திறனை அதிகரிக்கவும், பரிவர்த்தனை செலவீனங்களைக் குறைக்கவும், வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் நிதி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கவும், முதலீடு மற்றும் செலவினங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
 
ஒரு மென்மையான செயன்நிலை பொருளாதாரம் வினைத்திறனான மற்றும் நம்பகரமான கட்டணம் செலுத்தும் முறைமையை சார்ந்துள்ளது. சிறந்த கட்டணம் செலுத்தும் முறைமைகள் மூலமாக, வணிகங்கள் விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பணம் பெறலாம், அவற்றின் பணப்புழக்கத்தை மேம்படுத்தலாம், நிதியியல் சிக்கல்களைக் குறைக்கலாம் மற்றும் அவற்றின் பணப்பாய்ச்சல்களை இன்னும் துல்லியமாக கணிக்கலாம்.
 
ஒரு CDBC இனால் பரிவர்த்தனைகளின் செயலாக்க செலவீனங்கள் மற்றும் இடைத்தரகர்களின் தேவையைக் குறைக்க முடியும். இதனால் நிதி பாய்ச்சல் செலவீனங்களையும் குறைக்க முடியும். இதனால் அதிக செலவு குறைவான soft Point of Sale (POS)  செயலிகளையும் இயக்க முடியும். நிதி மோசடி EMEகள் எதிர்கொள்ளும் பிரதானமான சவால்களில் ஒன்றாகும். ஒரு CBDC இனால் அதன் பங்குதாரர்களுக்கு மிகவும் வெளிப்படையான கட்டண நுழைவாயில்களை வழங்க முடியும்.
 
பணக் கொள்கைக் கருவியாக CBDCகள்
 
பணக் கொள்கைக்கான அதன் தாக்கங்கள் இன்னும் தெளிவாக இல்லை என்றாலும், CBDC களால் புதிய புத்தாக்கமான பணக் கொள்கைக் கருவிகளை வழங்க முடியும். உதாரணமாக, மத்திய வங்கிகள் வணிக வங்கிகள் வைத்திருக்கும் CBDCகளுக்கான வட்டி விகிதங்களை தீர்மானிப்பதுடன் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வட்டி விகிதங்களை தீர்மானிக்க இதனைப் பயன்படுத்தலாம்.
 
CBDC க்கு நேர்மறையான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதன் மூலம், மத்திய வங்கி அரசாங்கப் பத்திரங்கள் போன்ற பிற சொத்துக்களை விட அதிகமான டிஜிட்டல் நாணயங்களை கையிருப்பில் வைத்திருக்க வணிக வங்கிகளை ஊக்குவிக்க முடியும். இது பண வழங்கலை அதிகரிக்கவும் வட்டி விகிதங்களைக் குறைக்கவும் உதவும். மாறாக, மத்திய வங்கி CBDC க்கு எதிர்மறையான வட்டி விகிதத்தை நிர்ணயித்தால், வணிக வங்கிகள் அதை வைத்திருக்க விரும்புவதில்லை என்பதுடன் பிற சொத்துக்களை கையிருப்பில் வைத்திருப்பதற்கு தேர்வு செய்யலாம். இது பண வழங்கலை குறைக்கவும் வட்டி விகிதங்களை அதிகரிக்கவும் உதவும்.
 
CBDC களும் அடுக்கடுக்கான வட்டி விகிதங்களை ஆதரிக்கின்றன. அடுக்கு வட்டி விகித அமைப்பானது CBDC வைப்புகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை செலுத்துவதற்கு ஒரு மத்திய வங்கியை அனுமதிக்கின்றது. CBDCக்கான ஓர் அடுக்கு வட்டி விகித அமைப்பானது, CBDC வைப்புத்தொகைகளுக்கு மத்திய வங்கியானது வைத்திருக்கும் தொகையைப் பொறுத்து வெவ்வேறு வட்டி விகிதங்களை செலுத்த அனுமதிக்கிறது, இது பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது மறுபுறத்தில், CBDCக்கான கேள்வியை பாதிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களின் ஒட்டுமொத்த நிலையை பாதிக்கலாம்.
 
மத்திய வங்கியானது சிறிய வைப்புத்தொகைகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தை செலுத்தும் அதே வேளையில், வணிக வங்கிகள் வைத்திருக்கும் பாரிய CBDC வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதத்தை செலுத்தலாம். இதன் விளைவாக, வணிக வங்கிகள் அதிகளவான CBDC ஐ வைத்திருக்கலாமென்பதுடன், பண வழங்கலை அதிகரித்து வட்டி விகிதங்களைக் குறைக்கலாம். சிறிய வைப்புக்கள் மீதான குறைந்த வட்டி விகிதமானது சிறிய அளவிலான CBDC ஐ வைத்திருப்பதில் இருந்து வணிக வங்கிகளை ஊக்கப்படுத்தாமல் போகலாம், இதன் விளைவாக பண வழங்கல் குறைவடைவதுடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். மேலதிகமாக, சில வகையான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அல்லது ஊக்குவிகாமலிருக்க இந்த அமைப்பு பயன்படுத்தப்படலாம்.
 
மத்திய வங்கிகள் புழக்கத்தில் உள்ள CBDC களை நிர்வகிக்கவும் வட்டி விகிதங்களில் செல்வாக்கு செலுத்தவும் திறந்த சந்தை நடவடிக்கைகளில் அத்தகைய நாணயங்களைப் பயன்படுத்தலாம். மத்திய வங்கியானது நாணயத்தை வாங்குவதன் மூலம் புழக்கத்தில் உள்ள CBDC களின் அளவை அதிகரிக்க முடிவதுடன், இதனால் பண வழங்கலை அதிகரிக்கவும் வட்டி விகிதங்களைக் குறைக்கவும் முடியும். மாறாக, CBDCகளை விற்பதன் மூலம் புழக்கத்தில் உள்ள CBDCகளின் ஒட்டுமொத்த அளவைக் குறைக்க முடிவதுடன், இது பண வழங்கலை குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தும்.
 
CBDC கள் வணிக வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுமக்களுடன் கூட திறந்த சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது பணக் கொள்கையின் செயற்திறனை அதிகரிக்கலாம். இருப்பினும், திறந்த சந்தை நடவடிக்கைகளில் CBDCக்களின் தாக்கம் CBDC அமைப்பின் பிரத்தியேகங்கள், ஒழுங்குமுறை சூழல் மற்றும் பொருளாதாரத்தின் பண்புகள் போன்ற காரணிகளைப் பொறுத்ததாகும்.
 
மேலும், பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளுக்கு கடன் வழங்குவதற்கு மத்திய வங்கிகள் CBDC களைப் பயன்படுத்தலாம். ஓர் மத்திய வங்கியானது அதிகரித்த வேலையின்மை அல்லது கைத்தொழில்மயமாக்கல் அற்றுப்போதல் போன்ற பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் ஒரு குறிப்பான பிராந்தியத்திற்கு கடன் வழங்க விரும்பலாம். குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள வணிக வங்கிகளுக்கு CBDC களை வழங்குவதன் மூலம், மத்திய வங்கி பண வழங்கலை அதிகரிக்கவும் வட்டி விகிதங்களை குறைக்கவும், வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தை அதிகரிக்க உதவ முடியும்.
 
அதே வழியில், ஓர் மத்திய வங்கியானது சிறு வணிகங்கள் அல்லது புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட துறையில் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கு விரும்பலாம். இந்த தீர்மானத்திற்கு CBDC களையும் பயன்படுத்தலாம்.
 
இவ்வாறு, CBDC களைப் பயன்படுத்துவதன் மூலம், வணிக வங்கிகள் தங்கள் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய அதிகமான CBDC களைக் கொண்டுள்ளன. இது பொருளாதாரத்தில் CBDC களின் புழக்கத்தையும், CBDC களைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். மேலதிகமாக, இது அதிகமான வணிக வங்கிகள் CBDC களை பிணையமாக வைத்திருப்பதனால், CBDC களை பொருளாதாரத்தில் ஏற்றுக்கொள்வதை அதிகரிக்கலாம்.
 
மத்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே நிதி பரிமாற்றத்தை அனுமதிப்பதன் மூலம் CBDC கள் எல்லை தாண்டிய தீர்வுக்கும் பயன்படுத்தப்படலாம். இதனை நிகழ்நேர, பாதுகாப்பான பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் blockchain அடிப்படையிலான தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த நாணயங்கள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளின் செயற்திறனை அதிகரிக்கின்ற அதே நேரத்தில் வங்கி முகவரகங்கள் போன்ற இடைத்தரகர்களின் தேவையை குறைக்கலாம். இது நாணய தளம்பல்கள் போன்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய சில அபாயங்களைக் குறைக்கலாம்.
 
CBDCகள், மத்திய வங்கியால் ஆதரிக்கப்படும் நிலையான, டிஜிட்டல் நாணயத்தை வழங்குவதன் மூலமாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய சில அபாயங்களை குறைக்கலாம். பாரம்பரிய அந்நியச் செலாவணி சந்தைகளுடன் தொடர்புடைய திரவத்தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும் வகையில், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மிகவும் எதிர்வுகூறக்கூடியதாகவும் நம்பகரமானதாகவும் இருக்கும்.
 
CBDC இனுடைய பெறுமதியை அமெரிக்க டொலர் போன்ற உறுதியான நாணயத்துடன் இணைப்பதன் மூலமாக, CBDCகள் அந்நிய செலாவணி விகித அபாயங்களுக்கு வெளிப்படுவதைக் குறைக்கலாம். இது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் நாணய தளம்பல்களின் தாக்கத்தை குறைப்பதன் மூலமாக நிதி அபாயங்களை தணிப்பதற்கு மத்திய வங்கிகளுக்கான செயற்பாட்டை இலகுவாகின்றது.
 
பாரம்பரிய பணத்தின் அதே மேற்பார்வைக்கு உட்பட்ட டிஜிட்டல் நாணயத்தை வழங்குவதன் மூலம், CBDC கள் எல்லை தாண்டிய பரிவர்த்தனையின் இணக்க செலவீனங்களைக் குறைக்கலாம். இந்த பரிவர்த்தனைகள் உள்ளூர் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க நடாத்தப்படலாம் என்பதுடன், மோசடி மற்றும் பணக்கடத்தல் அபாயங்களை குறைக்கும். CBDC களால் கட்டுப்பாட்டாளர்களுக்கு வெளிப்படையான பரிவர்த்தனை பதிவுகளை வழங்க முடிவதுடன், இது சந்தேகத்திற்குரிய செயற்பாட்டைக் கண்டறிய அனுமதிக்கின்றது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18