எழுத்துரு விளம்பரம் - Text Pub |
14 March, 2023, Tue 9:32 | views: 3120
கனேடிய பாடகியான எமிலி மூர் 2020 ஆண்டு கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்காக ஏர் பலூனிலிருந்து பாடல் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கனேடிய பாடகியும், பாடலாசிரியருமான எமில் மூரின் (Emilee Moore) பாட்டி ஷெர்லி லிரா கடந்த 2020 ஆம் ஆண்டு கொரானா தொற்றால் மரணமடைந்துள்ளார்.
வட அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் இறந்தவர்களில் தனது பாட்டியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார்.
அவர் சிறந்த சிக்கன் நூடுல்ஸ் சூப் செய்து தருவார்.
மேலும் மிகவும் மகிழ்ச்சியான பெண், அது மட்டுமில்லாது எப்போதும் மற்றவர்களிடம் கருணை காட்ட நேரம் ஒதுக்கியவர்” என தனது பாட்டியைப் பற்றி எமிலி மூர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மூர் டிஸ்னி பிக்சர் திரைப்படம் ஒன்றிற்கு “மேரீட் லைப் (Married Life)” என்ற பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
அத்திரைப்படத்தின் கதையின் படி கதாநாயகன் கார்ல் தனது மனைவி எல்லியை முதன் முதலில் சந்திக்கிறார்.
பார்வையாளர்கள் எல்லியின் மரணம் வரை அவர்களின் வாழ்க்கை தொகுப்பைப் பார்க்கிறார்கள்.
இப்பாடலை எழுதிய எமிலி மூர் “மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நான் எழுதிய பாடல்” எனக் கூறியுள்ளார்.
அவரது பாட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்பாடலை Tik Tok இல் வெளியிட்ட பிறகு, அந்த காணொளியை 2.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
மற்ற படைப்பாளிகளும் பாட்டிக்கு அஞ்சலி செலுத்தி, மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளனர் என்று மூர் கூறியுள்ளார்.
எமிலி மூர் கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஒரு ஹாட் ஏர் பலூன் சவாரியின் போது தனது பாட்டிற்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறி அதே பாடலைப் பாடி அதனை வீடியோ எடுத்துள்ளார்.
கொரானா தொற்றில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பாடிய பாடலும், வீடியோவும் இருப்பதால் அந்த வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() தாயின் உடலுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்த மகன்!30 March, 2023, Thu 11:26 | views: 1119
![]() 35 நிமிடங்களில் 3 கிலோ கோழி இறைச்சியை சாப்பிட இளம் பெண்25 March, 2023, Sat 8:30 | views: 1794
![]() பொம்மையுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற இளைஞர்23 March, 2023, Thu 12:50 | views: 3504
![]() வருங்கால கணவரை கொன்று சடலத்துடன் வாழ்ந்த அமெரிக்க பெண்22 March, 2023, Wed 8:33 | views: 2339
![]() மனித மலத்தை முகர்ந்து பார்க்கும் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா...?14 March, 2023, Tue 11:07 | views: 4463
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |