எழுத்துரு விளம்பரம் - Text Pub

தயிர் வடை

6 March, 2023, Mon 6:50   |  views: 3454

 தயிரில் உள்ள புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன.அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தயிர் வடையை ஹோட்டல் ஸ்டைலில் சுவையாக செய்ய வேண்டுமா?

 
தேவையான பொருட்கள்:
 
உளுத்தம்பருப்பு 2 டம்ளர்
 
தயிர் – ஒரு லிட்டர்
 
பச்சை மிளகாய் – 3
 
கொத்தமல்லித் தழை – ஒரு குத்து
 
தேங்காய் – கால் மூடி
 
உப்பு – 2 ஸ்பூன்
 
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
 
எண்ணெய் – கால் லிட்டர்
 
செய்முறை:
 
முதலில் 2 டம்ளர் உளுத்தம்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனை தண்ணீர் விட்டு, 2 முறை சுத்தமாக கழுவிய பின்னர், மீண்டும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
 
பிறகு ஊறிய உளுத்தம்பருப்பில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அதனை கிரைண்டரில் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
சரியான பதம் கண்டறிய கொஞ்சம் உளுத்த மாவை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு பார்க்க வேண்டும். அப்பொழுது உளுத்தம் மாவு கரையாமல் தண்ணீரில் மிதக்க வேண்டும். இதுவே வடை செய்வதற்கான சரியான பதமாகும். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்தாலும் வடை சாஃப்டாக இருக்காது.
 
அதன் பின்னர் ஒரு லிட்டர் தயிரை நன்றாக கரைத்து வைக்க வேண்டும்.
 
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தேங்காயைத் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த விழுதை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
 
பின்னர் உளுத்த மாவில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கொஞ்சம் மாவை எடுத்து வடை தட்டி, எண்ணெயில் போட்டு, பொரித்து எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு சுட்டு எடுத்த வடையை ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் மூழ்க வைத்து, உடனே எடுத்து தயிரில் போட வேண்டும். இவ்வாறு தயிரில் போட்ட வடையை ஐந்து நிமிடம் ஊறவைத்து பிறகு வேறு தட்டிற்கு மாற்ற வேண்டும். அவ்வளவுதான் இந்த வடையை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது ஓம்ம பொடி தூவி சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும்.

 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

நுங்கு பாயாசம்

27 March, 2023, Mon 4:47   |  views: 1028

மட்டன் நெய் ரோஸ்ட்

20 March, 2023, Mon 0:29   |  views: 2115

உருளைகிழங்கு ஆம்லெட்

16 March, 2023, Thu 14:01   |  views: 2579

வாழைக்காய் கிரேவி..

9 March, 2023, Thu 5:26   |  views: 3160

மீன் தொக்கு

25 February, 2023, Sat 3:47   |  views: 5021
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18