எழுத்துரு விளம்பரம் - Text Pub

கூந்தல் வேகமாக வளரனுமா..?

28 February, 2023, Tue 7:30   |  views: 2440

 பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர்கள். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் வளர விடாமல் கொடுக்கின்றன. அதனால், கூந்தல் வேகமாக வளர பலவிதமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

 
இறைச்சிகள், கோழி, மீன், முட்டை, பால் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.  இந்த உணவுகள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும். முக்கியமாக, நீங்கள் உயர் புரதச்சத்து உணவு முறையை கடைப்பிடித்தால் போலேட், சல்பர், துத்தநாகம், வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் B12 ஆகியவை முடி உதிர்வை குறைத்து நன்றாக வளர வைக்கும். எனவே தான், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான இந்த சூப்பர் உணவுகளை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்..
 
நெல்லிக்காய் : முடி வளர்ச்சிக்கு, நெல்லிக்காய் மற்றும் கற்றாழையை நீங்கள் காலையில் எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், இதனை ஜூஸ்-ஆகவும் குடித்து வரலாம். இது ஆக்சிஜனேற்ற பண்பினை கொண்டது நரை முடிக்கும், பொடுகு பிரச்சனைக்கும் நல்லது.
 
கறிவேப்பிலை : இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்தது. இது முடி உதிர்வை குறைக்கும், நரைமுடி வராமல் பாதுகாக்கும். 3 முதல் 4 கறிவேப்பிலை இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று வர, முடிக்கு நல்லது. கறிவேப்பிலை துவையல் செய்து இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையின் மகத்துவத்தை தெரிந்து கொண்டதால் இனி சாம்பார், கூட்டு, பொறியல்களில் கிடக்கும் கறிவேப்பிலையை  தூக்கி எறியாமல் சாப்பிடுவீர்கள்.
 
பாதாம் மற்றும் பிற பருப்புக்கள்;  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E மற்றும் பயோட்டின் நிறைந்தது.  ஆக்சிஜனேற்ற பண்பினையும் அதிகம் கொண்டது. தினமும் காலையில் 5 பாதாமையும், 1 வால்நட்டையும் சாப்பிட்டு வரவும். இதற்கு, இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவும். அத்துடன் மீன் எண்ணெயில் காணப்படும் ஒமேகா 3 முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கிறது.அதனால் மீன் எண்ணெய்யை சேர்த்துக் கொள்வது நல்லது.
 
முருங்கை கீரை : இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஜினேற்ற பண்புகள் அதிகமாக உள்ளது. மதிய உணவிற்கு, பருப்பு வகை உணவு அல்லது காய்கறி உணவு போன்றவற்றில் முருங்கை பொடியை சேர்த்துக்கொள்ளவும். அல்லது முருங்கை கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம். சில நாட்களிலேயே முடி வேகமாக வளர்வதை காண்பீர்கள்.
 
வேர்க்கடலை : இதில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் உள்ளது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். இரவில் ஊற வைத்த வேர்க்கடலையை அவல், உப்புமா போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18