எழுத்துரு விளம்பரம் - Text Pub |
26 February, 2023, Sun 13:52 | views: 3887
ஒரு மாதத்திற்கு 1 கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதாக 11 வயது சிறுமி அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ராக்ஸி ஜசென்கோ.
இவரது மகள் பிக்ஸி கர்டிஸிக்கு தற்போது 11 வயது தான் ஆகிறது.
ஆனால் மாதம் 2 லட்சம் டொலர் வருமானம் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் செய்யும் தொழிலை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த பிக்ஸி கர்டிஸி தனது பாடசாலை படிப்பை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
2 லட்சம் டொலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடியாகும்.
பிக்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது தொழிலைத் தொடங்கியுள்ளார்.
அதாவது குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொம்மைகளை ஒன்லைனில் விற்பனை செய்து வந்துள்ளார்.
சில மாதங்களிலே அவரது பிராண்ட் நல்ல வரவேற்பு பெறத் துவங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள குழந்தைகள் இவரது பொம்மைகளை அதிக அளவில் வாங்கியுள்ளார்கள்.
இதனால் அவுஸ்திரேலியாவில் இவரது பொம்மைகள் கூடுமானவரை விற்பனை ஆனது.
பிக்ஸி தனது படிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி தனது தொழிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார்.
இதனைப் பற்றிப் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் பிக்ஸிக்கு சொந்தமாக ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காருமிருக்கிறது.
இவரது 11வது பிறந்த நாள் விழாவிற்கு 40 ஆயிரம் டொலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.
பெரியளவில் வருமானம் ஈட்டியுள்ள பிக்ஸி கர்டிஸின் தொழில் திறமை தனக்குப் பெருமை அளிப்பதாக அவரது தாயார் ராக்ஸி கூறியுள்ளார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() சபிக்கப்பட்ட தீவின் மர்மம் நிறைந்த சம்பவங்கள்....30 March, 2023, Thu 11:11 | views: 592
![]() உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல்28 March, 2023, Tue 7:58 | views: 997
![]() உலகிலேயே மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு21 March, 2023, Tue 8:24 | views: 2573
![]() உலகின் சிறந்த விமான நிலையம்17 March, 2023, Fri 9:30 | views: 3654
![]() அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு13 March, 2023, Mon 10:30 | views: 2690
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |