விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஒரு அன்னாசிப் பழத்தின் விலை ஆயிரம் பவுண்டு - லண்டனில் சுவாரஸ்யம்

3 January, 2023, Tue 17:03   |  views: 4093

 லண்டனில் ஒரு அன்னாசி பழத்தின் விலை 1,000 பவுண்டு விற்பனை செய்யப்படுவதாக வியப்பான தகவல் ஒன்றை பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

 
அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
இந்த அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக லண்டனில் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழம் உள்ளது. இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
 
ஹெலிகான் அன்னாசி பழம் 1819ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், தோட்டக்கலை வல்லுநர்கள் நாட்டின் தட்பவெப்பநிலை அன்னாசி பயிரிட ஏற்றபடி இல்லை என்பதை உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் அவற்றை பயிர் செய்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை உரு வாக்கினர்.
 
இதற்கான செலவினம் அதிகம் என்பதால் ஒவ்வொரு அன்னாசி பழமும் 4 லட்சம் விலை (1,000 பவுண்டுகள்) பெறுகிறது. மேலும், இவற்றை பொதுவில் ஏலம் விடும்பட்சத்தில் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என்று ஹெலிகன் தோட்டத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
 
விக்டோரியன் கிரீன்ஹவுஸில் விளைவிக்கப்பட்ட இரண்டாவது அன்னாச்சி பழத்தை ராணி இரண்டாம் எலிசபெத் பரிசாகப் பெற்றதாக ஹெலிகன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18